தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் முழுப்படப்பிடிப்பும் வட சென்னை ஏரியாவிலேயே நடைபெற்றது. அப்படத்தின் கதைக்களமும் வட சென்னை பகுதிகள் என்பதால் மெட்ராஸ் படத்தை அங்கேயே எடுத்தார்கள். மெட்ராஸ் படம் வெற்றிபெற்ற சென்ட்டிமெண்ட் காரணமாகவோ என்னவோ, கார்த்தியின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பும் வட சென்னையிலேயே நடைபெறுகிறது.
விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தைத் இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'காஷ்மோரா' என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி. கொம்பனுக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவை ஓம்பிரகாஷும், இசையை சித்தார்த் விபினும் கவனிக்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 'காஷ்மோரா'வின் படப்பிடிப்பு வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில் தொடங்குகிறது. கார்த்தி, ஸ்ரீதிவ்யா, உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கும் இப்படப்பிடிப்பிற்காக திருவொற்றியூரில் பிரம்மாண்டமான செட் ஒன்றும் போடப்பட்டுள்ளதாம். விரைவில் நயன்தாராவும் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.