தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மல்ட்டி மில்லியனர் வருண்மணியன் உடனான திருமண ஒப்பந்தம் முறிந்துபோனாலும், அந்த துக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார் த்ரிஷா. வருண்மணியன் உடனான திருமணம் ரத்தானதால் தான் சோர்ந்துபோய்விடவில்லை, மாறாக முன்னைவிட அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக காட்டிக் கொள்ள நினைத்தோ என்னவோ, வழக்கத்தைவிட இந்த வருடம் தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பாக மட்டுமின்றி பிரம்மாண்டமாகவும் நடத்தி இருக்கிறார்.
காஸ்ட்யூமர் சிட்னி உள்ளிட்ட நட்புப் பட்டாளங்களுடன் விடியவிடிய தன் பிறந்தநாள் பார்ட்டியைக் கொண்டாடி இருக்கிறார் த்ரிஷா.
விடியவிடிய தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய த்ரிஷாவின் பார்ட்டியில் அவரது நண்பர்கள் பலரும் ஆட்டம் பாட்டம் என் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, ட்விட்டரிலும் த்ரிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதனால், த்ரிஷாவின் பிறந்தநாள் ட்விட்டரில் இந்திய அளவில் டிரென்டிங்கில் இருந்து வருகிறது! அது மட்டுமின்றி சென்னை, ஹைதராபாத்திலும் த்ரிஷாவின் பிறந்தநாள் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது. ட்விட்டரில் மட்டுமல்ல, இன்ஸ்டாகிராமிலும் இதுவரை 9,717 பேர் த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி உள்ள