தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் - 'வாலு'. ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பிறகு தள்ளிப்போடுவதில் வாலு படம் கின்னஸ் சாதனையை செய்து வருகிறது.
கடந்த 2 வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட வாலு படம் கடைசியாக மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின் மே 9ம் தேதி வாலு படம் வெளியாகும் என்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வாலு ரிலீஸ்.
என்ன காரணம்? சிம்பு செய்த கால்ஷீட் விரயத்தினால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகி, அதனால் பட்ஜெட்டும் எகிறியது. அதன் காரணமாக 'வாலு' படம் மிக நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வந்தது. இதனால் வட்டி அதிகரித்து படத்தின் பட்ஜெட் பல மடங்கு ஆகிவிட்டது. அதை சரிக்கட்ட வாலு படத்தின் விநியோக உரிமைக்கு கூடுதல்விலை கேட்கிறாராம். சிம்பு படத்தை வாங்குவதே ரிஸ்க்... இதில் கூடுதல் விலை வேறா என்று விநியோகஸ்தர்கள் ஓட்டம் எடுத்துவிட்டனர்.