Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

03 மே, 2015 - 18:24 IST
எழுத்தின் அளவு:
Presidend-honoured-National-awards

தாதா சாகிப் பால்கே மற்றும் தேசிய திரைப்பட விருதுகளை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் வழங்கினார்.

சிறந்த தமிழ் திரைப்படம் குற்றம் கடிதல், சி்றந்த குழந்தைகள் திரைப்படம் காக்கா முட்டை, காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவன் விஷ்ணு, சைவம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது நா.முத்துக்குமார். சைவம் படத்திற்காக சிறந்த பாடகி விருது உத்ரா, ஜிகர்தண்டா படத்திற்காக, சிறந்த துணை நடிகர் விருது பாபி சிம்ஹா மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என, தமிழ் சினிமாவிற்கு, இந்த ஆண்டு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.தேசிய விருதுகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் கலைஞர்கள்

கல்வித்துறையில் சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தும் படமான தமிழ் படம் குற்றம் கடிதலுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது : நா.முத்துக்குமார்

சிறந்த பாடகி விருது : உத்ரா உன்னிகிருஷ்ணன் ( படம் - சைவம்)

சிறுவர்களுக்கான சிறந்த திரைப்படம் :காக்கா முட்டை

சிறந்த படத்தொகுப்பாளர் விருது : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தாண்டா)

சிறந்த துணைநடிகர் விருது : பாபி சிம்ஹா (ஜிகர்தாண்டா)

சிறந்த ஹிந்தி படம் : குயின் (ஹிந்தி)

சி்றந்த நடிகை : கங்கனா ரனாவத்

சிறந்த நடிகர் : விஜய் (கன்னட படம் நானு அவனல்ல அவலு)

சிறந்த திரைப்படம் : கோர்ட் (மராத்தி)

சிறந்த பாப்புலர் படம் : மேரிகோம் (ஹிந்தி)

சிறந்த இயக்குநர் : ஸ்ரீஜித் முகர்ஜி (படம் - சொட்டுஷ்கோன்)

சி்றந்த நடனம் : ஹைதர்

சிறந்த இசை : ஹைதர்

சிறந்த காஸ்டியூம் டிசைன் : ஹைதர்

சிறந்த மராத்தி படம் : கில்லா

சிறந்த கன்னட படம் : ஹரிவு

சிறந்த வங்காள மொழி படம் : நிர்பஷிட்டோ

சிறந்த அசாம் படம் : ஒத்தெல்லோ

சிறப்பு விருது : அமிதாப் பச்சன் (படம் - பூத்நாத் ரிட்டர்ன்ஸ்)

இதுதவிர, ப்ரைட் ஆப் தமிழ் சினிமா என்ற புத்தகத்தை எழுதிய, யுடிவி தனஞ்ஜயனுக்கு சினிமா குறித்த சிறந்த எழுத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

இன்று மாலை, டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தேசிய விருதுகள் மற்றும் தாதா சாகி்ப் பால்கே விருதுகளை வழங்கினார்..

இந்தியாவின் முதல் முழுநீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா படம், 1913ம் ஆண்டு மே 3ம் தேதி திரையிடப்பட்டிருந்தது. அந்த படத்தை தயாரித்து வெளியிட்டவர் தாதா சாகிப் பால்கே. இதை கவுரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகிப் பால்கே விருது மற்றும் தேசிய விருதுகள், மே 3ம் தேதியே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in