Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஓகே கண்மணி' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்

03 மே, 2015 - 16:37 IST
எழுத்தின் அளவு:
A.R.Rahman-celebrates-O-Kadhal-Kanmani-victory-with-his-team

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மன நிறைவான வெற்றியைத் தன் குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ' படத்தின் பாடல்கள் கூட பெரிதாகப் பேசப்படவில்லை. அதற்கு முன் வெளிவந்த 'லிங்கா, காவியத் தலைவன்' ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட்டாகவில்லை, படமும் ஹிட்டாகவில்லை. 'கடல்' தோல்விக்குப் பிறகு தனது ஆஸ்தான இயக்குனரான மணிரத்னத்துடன் இணைந்து ரகுமான் பணியாற்றிய 'ஓ காதல் கண்மணி' பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட் ஆனது, பாடல்களும் ஹிட்டானது.


அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் வெற்றியை தனது குழுவினருடன் இணைந்து கொண்டாடியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்திற்காகப் பணியாற்றிய இஞ்சினியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள் ஆகியோருடன் சென்னையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் விருந்துடன் கொண்டாடியிருக்கிறார்கள். தனது குழுவினருடன் அந்தக் கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்றும் தனது வழக்கமான வசனத்துடன் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in