அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
புதுயுகம் தொலைக்காட்சி கே சீரிஸ் என்ற தலைப்பில் கொரியன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் வருகிற 4ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் டு தி பியூட்டி புல் யூ (ஏய் நீ ரொம்ப அழகா இருக்கேன்னு தமிழ்ல டைட்டில் வைக்கலாம்).
கொரிய நாட்டின் மிகப்பெரிய ஓட்டப்பந்தய வீரன் ஆலன். அவன் இந்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வான் என்று நாடே நம்புகிறது. அவனை தீவிரமாக காதலிக்கிறாள் பாபி. ஆலன் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக அவனை அருகில் இருந்து ஊக்குவிக்க நினைக்கிறாள். ஆனால் ஓட்பந்தய வீரனின் கவனம் சிதறும் என்பதால் பெண்களுடன் பழக அவனுக்கு தடைவிதிக்கிறது விளையாட்டு ஆணையம். இதனால் பாபி ஆண் வேடமிட்டு ஆலனுடன் ஒரே விடுதியில் தங்கி, பயிற்சி காலத்தில் அவனுக்கு துணையாக இருக்கிறாள். அவன் ஒலிப்பிக்கில் தங்கம் வென்றானா, பாபி ஆணாக மாறி அவனுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதா என்பது கதை. ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிற நம்ம ஊர் தத்துவத்தைதான் இந்த கொரியன் தொடர் உணர்த்துகிறது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த தொடர் ஒரு திரைப்படத்துக்கான அத்தனை கவனத்துடன் தயாரிக்கப்பட்டது. விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் 5 கேமராக்கள் கொண்டு தடகள போட்டிகள் படமாக்கப்பட்டுள்ளது. மின்ஹோ, ஷூல்லி, லீ ஹூன்யூ போன்ற பிரபல கொரியன் நட்சதிரங்கள் நடித்துள்ளனர். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.