ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மானாட மயிலாட புகழ் கீர்த்தியின் காதலுக்கு ஒரு வழியாக கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. கே.பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவும், கீர்த்தியும் காதலிப்பது இண்டஸ்ரிக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் காதலுக்கு இரு தரப்பிலிருந்தும் ஆதரவு இல்லாமல் இருந்தது. பலமுறை திருமண பேச்சு வார்த்தை நடந்து, அது முழுமையடையாமல் போய்விட்டது. இப்போது ஒரு வழியாக இரு குடும்பமும் காதலுக்கு ஓகே சொல்ல வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமணஞ்சேரி கோவிலில் திருமணம். வானகரத்தில் திருமண வரவேற்பு நடக்கிறது.
தற்போது கீர்த்தி மானாட மயிலாட நிகழ்ச்சியின் 10வது பகுதியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சியின் கின்னஸ் சாதனையிலும் கீர்த்தி பங்கேற்றார். இந்த நிலையில் திருமணம் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் 10வது பகுதி முடிந்து விடும் என்றாலும் அடுத்து மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்திருக்கிறது.
திருமணத்திற்கு முன்பே கீர்த்தி சின்னத்திரைக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்றே கூறப்படுகிறது. சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் வருவார் என்றும் கூறப்படுகிறது. ஜெயம்ரவி சின்னத்திரை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆர்த்தி சின்னத்திரையில் இருந்து முழுமையாக விலகிக் கொண்டார். அதே போல கீர்த்தியும் விலகி விடுவார் என்று கூறப்படுகிறது. "இப்போதைக்கு அதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. பெரியவர்கள் எடுக்கும் முடிவுதான் இதில் முக்கியமானது" என்கிறார் கீர்த்தி. பல சினிமா வாய்ப்புகள் வந்தும் கீர்த்தி சினிமா பக்கம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.