இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகச் சிறந்த அடையாளமாக விளங்குகிறார் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் வாரிசு; இயக்குனர் மணிரத்னத் தின் அறிமுகம் என்ற பெருமைகளுடன், திரை உலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ள கவுதம் கார்த்திக்கிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. வெற்றிக்காக வெறியுடன் உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவருடன் பேசியதில் இருந்து...
* சமீபத்திய சந்தோஷம்...?
டைட்டானிக் கப்பலை விட, நான்கு மடங்கு பெரிதான, சகல வசதிகளும் உள்ள கப்பலில், வை ராஜா வை படப்பிடிப்பு நடந்தது. நம்ம நுங்கம்பாக்கம் சாலை மாதிரி, வாக்கிங் சாலையும் இருந்தது. ஷூட்டிங் நடத்தப்பட்ட எட்டு நாட்களும், தரையில் இருக்கும் நகரத்தை போலவே இருந்தது. சிங்கப்பூரில் புறப்பட்ட கப்பல், தாய்லாந்து சென்று, மீண்டும் சிங்கப்பூர் வரும் வரை, ஷூட்டிங் நடத்தினோம். கப்பல் பயணமும், எடுக்கப்பட்ட காட்சிகளும் ரொம்ப ஜாலியாகவும், சந்தோஷமாகவும் இருந்தன.
* ஐஸ்வர்யா தனுஷ் பற்றி?
சூப்பர் ஸ்டாரின் பொண்ணுங்கிற எந்த பந்தாவும் அவங்ககிட்ட இல்லை. அவங்களே வந்து, எனக்கு கதை சொன்னாங்க. எல்லாரிடமும் எளிமையா பழகுறாங்க. ஷூட்டிங்கின் போது, சின்ன சின்ன விஷயங்கள் மிஸ்சாகி விடக்கூடாது என்பதில் ரொம்பவே மெனக்கெட்டாங்க. வை ராஜா வை மேக்கிங் வித்தியாசமா இருக்கணும்ங்கிறதுக்காக, நிறைய செலவு செஞ்சிருக்காங்க.
* சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க மறுப்பதாக...?
வித்தியாசமான கதை உள்ள படங்கள், எந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் ரசிகர்கள் ரசிப்பர். எந்த கேரக்டரில் நடிச்சாலும், அது பேசப்படும் வகையில் இருக்க வேண்டும் என, நினைக்கிறேன்; அதற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கமாட்டேன் என, சொல்லவில்லை; எனக்கு கதை பிடித்திருந்தால், எந்த பட்ஜெட் படத்திலும் நடிப்பேன்.
* ப்ரியா ஆனந்தை காதலிப்பதாக...?
ப்ரியா ஆனந்த் ஜாலியான டைப், ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலப்பாக இருப்பாங்க. இயக்குனர் ஷாட் ரெடின்னு சொன்னதும், அப்படியே மாறி கேரக்டரில் ஒட்டிக்குவாங்க. யூனிட்டில் இருப்பவர்களுடன் சகஜமா பேசுவாங்க; என்னிடமும் சகஜமாக பழகினாங்க. மற்றபடி, ப்ரியாவை காதலிப்பதாக வெளியாகும் செய்தி தவறு.
* நடிப்பு பற்றி, அப்பா அட்வைஸ் செய்வது உண்டா?
என் படத்தோட, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அப்பா வந்ததில்லை. நீ நீயாக இரு; யதார்த்தமா நடிக்க பழகிக்க. எப்படி யதார்த்தமா செய்யலாம்ன்னு மட்டும் பார்; நல்லா வரும் என, கூறினார். அதைத்தான் நானும் செய்கிறேன்.
* புதிய நடிகர்கள் வருகை அதிகம் உள்ளதே?
எத்தனை பேர் சினிமாவுக்கு வந்தாலும், அத்தனை பேரையும், கோலிவுட் வரவேற்கும். இன்றைய இளம் நடிகர்கள் இடையே பொறாமை எதுவும் இல்லை. எந்த நடிகரின் புதிய படம் வெளியானாலும், சக நடிகர்கள் வாழ்த்துச் சொல்ல தயங்குவதில்லை. இந்தளவிற்கு நடிகர் களிடையே நல்ல நட்பு உள்ளது. யாரையும் போட்டியாக நினைப்பதை விட, நல்ல கதைகளாக பார்த்து நடித்து, ஜெயிக்க வேண்டும் என்ற நினைப்பு தான் நடிகர்களிடம் உள்ளது.
* ரசிகர்கள் பற்றி?
சினிமாவில், வித்தியாசமான கதைகள், நவீன தொழில்நுட்பம் குறித்தெல்லாம் ரசிகர்கள் பேசும் நிலை உள்ளது. ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வருவதற்கு, தேவையான விஷயங்கள், மேக்கிங்கில், இருக்க வேண்டும். பிடித்த நடிகரின் புதிய படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தில் என்ன சொல்லி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க, அதிகம் ஆர்வப்படுறாங்க. அவுங்களுக்கு பிடித்த விஷயம் இல்லை என்றால், டென்ஷனாயிடுறாங்க; தாறுமாறா பொங்கிடுறாங்க.
* சொந்த படம் தயாரிப்பதாக கூறப்பட்டதே?
இப்போதைக்கு சொந்தப் படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை.அப்பாவின், அக்னி நட்சத்திரம் போல படம் பண்ணணும்ன்னு ஆசை இருக்கு; நேரம் பார்த்து செய்வேன்.