ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
கும்கி நாயகி லட்சுமிமேனனின் நடிப்புக்கு கொம்பன் வரை நல்ல பெயரே கிடைத்திருக்கிறது. இப்போதைய நடிகைகளில் அவர் அளவுக்கு யாராலும் இயல்பாக நடிக்க முடியாது என்ற பெயரையே சம்பாதித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் புதிய படத்திற்கு அவர் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ப்ளஸ்-2 தேர்வெழுதியுள்ள லட்சுமிமேனன், அடுத்தகட்டமாக கடுமையான யோசனையில் இருக்கிறாராம். அதாவது, நல்ல நடிகை என்று பெயரெடுத்து விட்டபோதும், சினிமாவில் நீண்டகாலம் பயணிக்க முடியுமா? இல்லை இன்னும் சில படங்களோடு பயணம் முடிந்து விடுமா? என்கிற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். அதனால், ப்ளஸ்-2 வோடு படிப்பை ஏறக்கட்டி விட வேண்டியதான் கொம்பனுக்கு முன்புவரை கூறி வந்த லட்சுமிமேனன், இப்போது சினிமா கைவிட்டாலும் கல்வி கைவிடாது. அதனால் அடுத்து கல்லூரி படிப்பை தொடர்வதுதான் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்.