இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது டோலிவுட்டில் போலீஸ் ஸ்டோரி தான் ஹிட் ஆகும் என்ற நிலை இருப்பதாகவே தெரிகிறது. சிறிய ஹீரோ முதல் மிகப்பிரபல ஹீரோ வரை போலீஸ் கேரக்டர் தான் நடிப்பேன் என்று விரும்புவதாக கூறப்படுகின்றது.ஏனெனில் அந்த கதைகளத்தில் நிறைய ஆக்ஷன், காமெடி மற்றும் பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சரியாக சேர்த்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கின்றது.மேலும் அந்த படங்கள் ஹிட்டாகி வசூலை குவிக்கின்றது. அந்த வரிசையில், பிரபல ஹீரோ நரா ரோஹித் தொடர்ந்து இரண்டாவது முறையாக போலீசாக நடிக்கிறார். அவருடைய சமீபத்திய படமான ரவுடி பெல்லோவிலும் போலீசாக நடித்தது நினைவிருக்கலாம். அவர் தற்போது நடிக்கும் அசுரா படத்திலும் போலீசாக வருகிறார். பிரபல இயக்குனர் ஷ்யாம் தேவபக்துனி இயக்கம் அசுரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ரோஹித் முந்தைய படத்தில் போலீஸ் அதிகாரிக்கான உடல் அமைப்பை பெற அதிக முயற்சி எடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதன் விளைவாக அவர் தனது பிட்னஸ் பற்றியும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக ஹீரோ நரா ரோஹித் போலீஸ் உடையில் தோன்றி பேசும் பஞ்ச் வசனங்கள் தான் தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக் ஆகும்.