ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் அப்பட்டமான காப்பி படங்கள், இன்ஸ்பிரேஷன் படங்கள், தழுவல் படங்கள் என பல ஹாலிவுட் படங்களைக் காப்பியடித்து படங்களை இயக்குவது ஒரு காலத்தில் இருந்தது. சமீப காலத்தில் கொரிய மொழிப் படங்களையும், மற்ற உலக மொழிப் படங்களையும் காப்பியடித்து படங்களை எடுத்து அவற்றிற்கு விருதுகளைப் பெறும் விவகாரமும் இங்கு நடந்து வருகிறது. இது பற்றிய விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகவே எழுந்து வருகின்றன.
அப்படி ஒரு விமர்சனத்தை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள படம் 'வை ராஜா வை'. ரஜினிகாந்த் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படம் ஹாலிவுட்டில் 2008ம் ஆண்டு ராபர்ட் லுகெடிக் இயக்கிய வெளிவந்த '21' என்ற படத்தில் அப்பட்டமான தழுவல் என்ற பேச்சு தற்போது எழுந்துள்ளது.
அதி புத்திசாலி மாணவனான நாயகன் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள சூதாட்ட கிளப்புகளில் அவருடைய பேராசிரியரால் அழைத்துச் செல்லப்பட்டு சூதாட்டம் ஆட வைக்கப்படுகிறார். அவருடைய கணக்குத் திறமையால் பல டாலர்கள் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் சூதாட்ட கிளப்புகளில் பிரச்சனைகள் எழ, அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் '21' படத்தின் கதை.
'வை ராஜா வை' படத்தின் போஸ்டர் டிசைன்கள், டிரைலர், கதாபாத்திரங்கள், மற்றும் கதைக் களம் ஆகியவற்றைப் பார்க்கும் போது '21' படத்துடன் அதிகமாகவே ஒத்துப் போகிறது.