Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாஸ்' டீசர் - 10 லட்சம் ஹிட்ஸ்

27 ஏப், 2015 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Mass-teaser-crosses-10-lakhs-hits

அஜித், விஜய் வரிசையில் அவர்களுக்கு அடுத்து சூர்யாதான் இருக்கிறார் என்பதை சமூக வலைத்தளங்களில் உள்ள வரவேற்பை வைத்தே புரிந்து கொள்ளலாம் யூடியூப், டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீசர் அல்லது டிரைலர் வெளியானால் என்ன ஒரு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு சூர்யாவின் படத்திற்கும் இருக்கிறது. இது பிடிக்காமல்தான் சூர்யா நடித்த 'அஞ்சான்' படம் வெளிவந்த போது அஜித், விஜய் ரசிகர்கள் இருவருமே திட்டமிட்டு 'அஞ்சான்' படத்தைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி, அந்தப் படத்தை தோல்வியடைச் செய்தனர் என்று திரையுலகத்திலும் ஒரு பரவலான பேச்சு இருக்கிறது.


இப்போது 'மாஸ்' படத்தின் டீசரும் இரண்டே நாளில் 11 லட்சம் ஹிட்ஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. உண்மையிலேயே ஒரு பரபரப்பான டீசராக இந்தப் படம் இருப்பதை இப்போதும் அஜித், விஜய் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால், இந்த டீசருக்கும் அவர்கள் கடுமையான கமெண்ட்டுகளைப் போட்டு வருகிறார்கள். 11 லட்சம் பேர் ஒரு டீசரைப் பார்க்கிறார்கள் என்றால் பலரும் அது எப்படியிருக்கும் என்ற ஆசையில் பார்ப்பதுதான் அந்த அளவிற்கு ஹிட்ஸ் வரக் காரணமாக அமைகிறது.


இப்படி ஒரு வரவேற்பு சூர்யாவிற்குக் கிடைப்பதை, அஜித், விஜய் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததன் விளைவே அப்படிப்பட்ட கமெண்ட்டுகள் என்றும் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இப்படி ரசிகர்களுக்குள் அடித்துக் கொள்வது சினிமாவிற்கு நல்லதல்ல என்பதுதான் திரையுலகத்தினரின் கருத்தாக அமைந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in