'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பெயரில், அவர் படித்த பள்ளியில் விளையாட்டு கோப்பை வழங்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் ஷனாவர் பகுதியில் உள்ள தி லாரன்ஸ் பள்ளியில், சஞ்சய் தத், பள்ளிப்படிப்பு படித்திருந்தார். திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தபோதும், தான் படித்த பள்ளியுடனான தொடர்பை, சஞ்சய் தத் துண்டித்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு முறை ஷனாவர் வரும்போதும், பள்ளிக்கு தவறாமல் வருகை தந்துவந்த சஞ்சய் தத், பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையி்ல், விளையாட்டுப் போட்டிக்கு வழங்கப்படும் கோப்பை ஒன்றிற்கு, சஞ்சய் தத்தின் பெயரை, அப்பள்ளி நிர்வாகம் சூட்டியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பான குற்றங்களுக்காக, மும்பை ஏரவாடா சிறையில், தற்போது சஞ்சய் தத் சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பி்டத்தக்கது.