தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராமகிருஷ்ணன் நடித்த குங்குமப் பூவும் கொஞ்சி புறாவும், கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்மோகன். இந்த படங்களில் கிருஷ்ணா-மா.க.பா.ஆனந்த் இணைந்து நடித்த வானவராயன் வல்லவராயன் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.
விளைவு, தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி விட்டார் ராஜ்மோகன். பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமான லட்சுமண் இந்த படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது. மேலும், தம்பி ராமைய்யா, எஸ்.பி.பி.சரண் உள்பட பல கமர்சியல் நடிகர் நடிகைகளும் நடிக்கியிருக்கிறார்களாம்.
முந்தைய இரண்டு படங்களில் இருந்தும் மாறுபட்ட கதையில், அதாவது மலைசார்ந்த ஒரு வித்தியாசமான கதையில் இப்படத்தை படமாக்குகிறாராம் ராஜ்மோகன். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படத்தை க்ளீன் எண்டர்டெய்ன்மென்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் தீபா அய்யர் என்கிற துபாய் தொழிலதிபர் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறாராம்.