'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கவுரவம், லட்சுமி வந்தாச்சு உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் ஹிந்து ரங்கராஜன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது பேரன் ரோஹித் ரமேஷ் சினிமா தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். தனது டபிள்யூ.டி.எப் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்.
முதல் கட்டமாக பல படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக இருந்த ஜி.ஏ.ஹரி மற்றும் 2 தேசிய விருதுகள் பெற்ற காக்க முட்டை படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து 3 படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். இதில் முதல் படத்தை காக்க முட்டை படத்தில் மணிகண்டனின் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சங்கய்யா இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இதற்கான நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.