ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பாலிவுட் இளம்நடிகர் ஷாகித் கபூருக்கு, வரும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாகித் கபூருக்கும், டில்லியை சேர்ந்த மிர்சா ராஜ்புட்டிற்கும், நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாக தகவல் கசிந்திருந்த நிலையில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, பார்ஸி படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதம் துவங்கப்படுவதாக இருந்தது. தான் சொந்த விஷயங்களுக்காக, தயார் செய்ய வேண்டியிருப்பதால், பார்ஸி படத்தின் இயக்குனரிடம், படப்பிடிப்பை தள்ளிவைக்குமாறு, ஷாகித் கபூர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பார்ஸி படத்தின் படப்பிடிப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருமண வேலைகளில், ஷாகித் மும்முரமாக இருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து, வரும் ஜூன் மாதத்திலேயே, ஷாகித்திற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.