பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலில் குளித்து வந்த பவுர்ணமி நிலா போல் பளீச் என, இருக்கிறார் டாப்சி. நொடிக்கொரு புன்னகை; நிமிடத்துக்கொரு வெட்கம் என, வசீகரிக்கிறார். இந்த வெள்ளாவி தேவதை,
பேசுவதை கேட்டு கொண்டு இருப்பதே ஒரு சுகமான அனுபவம் தான்.
பேயாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்ப வித்தியாசமான, சவாலான அனுபவம் அது. அதிக, ரிஸ்க் எடுத்து நடித்தேன். ஆனால், லாரன்ஸ் சார், நுாறு சதவீதம் என் மேல் நம்பிக்கை வைத்து, நான் தான் இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி நடிக்க வைத்தார். என் பேய் நடிப்பு, ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
சின்ன வயதில் பேய் பயம் உண்டா?
அதை ஏன் கேட்கறீங்க; பேய் என்ற வார்த்தையை கேட்டாலே, உடல் நடுங்கும். அப்போதிலிருந்து இப்போ வரை தனியாக துாங்கவே மாட்டேன். பாட்டி, தங்கை இப்படி யாராவது என்கூட இருப்பாங்க. இதுவரை ஒரு பேய் படம் கூட பார்த்தது இல்லை. இருட்டா, சத்தம் இல்லாம அமைதியா இருந்தாலே நான் பயந்திடுவேன்.
படத்துக்காக சிகரெட் எல்லாம் பிடிச்சிருக்கீங்க போல...?
ரொம்ப மோசமான அனுபவம். எனக்கு சிகரெட் என்றாலே பிடிக்காது. சிகரெட் பத்த வைத்த போது, அந்த புகை கண், மூக்குக்குள் எல்லாம் போயிடுச்சு. கிட்டத்தட்ட, 20 முறை அந்த டேக் வாங்கினேன். அந்த சீன் எடுத்த அன்று முழுவதும் சாப்பிட முடியவில்லை. இனி என் வாழ்க்கையில சிகரெட் பக்கம் போகவே மாட்டேன்.
உங்க அடுத்த படமான, வை ராஜா வை பற்றி?
அந்த படத்தில், கெஸ்ட் ரோல் செய்துருக்கேன். அந்த படம் சூதாட்டம் பற்றியது. அதை, நான் மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இது தான், அந்த படத்தில் என்னோட ரோல். இதில், வேடிக்கை என்னவென்றால், சூதாட்டம் பற்றி எனக்கு சுத்தமாக தெரியாது. ஐஸ்வர்யா தனுஷ் தான், நம்பிக்கை அளித்து, நடிக்க வைத்தாங்க. படங்களில் மீடியாவில் வேலை பார்க்கும் பெண்ணா நடிக்கிறீங்க;
நிஜ வாழ்க்கையில மீடியாவில் வேலை பார்க்க ஆசை இருக்கா?
அய்யோ... என்னால முடியாது. ரொம்ப மன அழுத்தம் புடிச்ச வேலை இது. எப்பவுமே டென்ஷனா இருக்கணும். புதுசா, புதுசா ஏதாவது யோசிக்கணும். நிச்சயமா எனக்கு இந்த வேலை செட் ஆகாது.
ஜெய் கூட நடிக்கிற படத்தில், த்ரிஷா வாய்ப்பை, நீங்க தட்டி பறிச்சிட்டீங்களாமே?
அதைப்பற்றி எனக்கு தெரியாது. ஏதோ புதுப்படம் என்று தான் என்னிடம் கூறினர். த்ரிஷா நடிக்க இருந்த படம் என்ற விவரம் எனக்கு தெரியாது. கதை கேட்டேன்; சூப்பரா இருந்துச்சு. ஓ.கே.,ன்னு ஒத்துகிட்டேன்.
நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற ஆசை இல்லையா?
அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பத்து படங்களில் பரபர என நடித்து, ஏதோ, பந்தயத்துக்கு போற மனநிலையில் என்னால் வேலை செய்ய முடியாது. எனக்கான ஆடியன்ஸ் இருக்காங்க, ரொம்ப செலக்டிவ்ஆன படங்களாக தான் நடிப்பேன். ஹீரோ பக்கத்தில நிக்குறது, மரத்தை சுற்றி டூயட் பாடுறது, போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை.
இரண்டு ஹீரோயின் படங்களில் அதிகமாக நடிக்கிறீங்களே?
நான் என்ன செய்ய முடியும்? 90 சதவீத ஹீரோக்கள், படங்களில் இரண்டு ஹீரோயின்கள் இருக்க வேண்டும் என, ஆசைப்படுகின்றனர். படம், கலர் புல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க. சிங்கிள் ஹீரோயின் படவாய்ப்பு வந்தால், வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்.
ஹீரோ சிபாரிசு செய்தால் தான், ஹீரோயின் களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மையா?
உண்மை தான்; இப்போது ஹீரோக்களுக்கு தான் மார்க்கெட் இருக்கு. ஹீரோயினுக்காக யாரும் படத்துக்கு போவது இல்லை.ஹீரோவுக்காகத் தான் போறாங்க.எனவே, தனக்கு எந்த ஹீரோயின் வேண்டும் என ஹீரோ முடிவு செய்வது தப்பில்லையே? அப்படி சிபாரிசு செய்திருந்தால், நானும் இந்நேரம் பல படங்களில் நடிச்சிருப்பேன்.