‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினி-கமல் படங்களில் இருந்து இன்றைய இளம் தலைமுறை நடிகர்களின் படங்கள் வரை தனக்கென ஒரு காமெடி வட்டத்தை உருவாக்கி அசத்தி கொண்டிருப்பவர் மயில்சாமி. இவரது வாரிசு அன்பு. அப்பாவை போல் காமெடியில் அல்லாமல் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார் அன்பு. தற்போது தமிழில், ''ஒரு பொம்மலாட்டம் நடக்குது'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் அடுத்தப்படியாக, ''கொக்கு'' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அன்பு. நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் அசத்திய ஜான்சன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். சென்னையில் ஒரு சேரி பகுதியை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார் ஜான்சன். கொக்கு படத்தில் சேரி இளைஞனாக நடிக்கிறார் அன்பு. 'பட்டியல்' சேகர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்காக அன்பு என்ற இவரது பெயரை துரோனா என்ற மாற்றியிருக்கிறார் பட்டியல் சேகர்.
இப்படத்தில் நடிப்பது பற்றி அன்பு என்கிற துரோனா கூறுகையில், ராபர்ட் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டரிடம் முறைப்படி நடனமும், பாண்டியன் மாஸ்டரிடம் சண்டை பயிற்சியும் பெற்றும் சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் நடிக்க அப்பா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து தமிழில் நல்லதொரு இடத்தை பிடிப்பேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் துரோனா.