ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருப்பவர் ராம்கி. இன்றும் இளமை குறையாமல் படங்களில் நடித்து வருகிறார். தற்போது வாய்மை, படம் திரைக்கு வரஉள்ளது. இதை தொடர்ந்து அட்டி படம் பேசும் வகையில் இருக்குமாம். இப்படத்தை சுராஜ் உதவி இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தடா. இப்படி படங்கள் போய் கொண்டுருந்தாலும் மூத்த நடிகர் என்ற முறையில் இப்போது சினிமா எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு. எடுத்த எடுப்பிலேயே ரொம்பவும் மோசமாக இருக்கிறது. ஒரு தியேட்டரில் இரண்டு ஷோ தான் ஒரு படத்துக்கு கிடைக்குது. இப்படியிருந்தால் தயாரிப்பாளர் நிலை என்ன ஆகும். எப்படி இண்டஸ்ரி வளமாக இருக்கும் நான் முப்பது வருஷமா இருக்கேன் இப்போது உள்ள சினிமாவின் நிலைமையை நான் எப்போதும் சந்தித்தது இல்லை. இப்படியே தொடர்ந்தால் சினிமா கவலைக்கிடமாகத்தான் இருக்க போகிறது இதை மாற்ற வேண்டும் என்கிறார் ராம்கி.