வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் டங்கால் படத்தில், அமீர் கானின் மகளாக, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனை நடிக்க உள்ளார். அமீர் கானின் மகள் கேரக்டரில், கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் அல்லது டாப்ஸி நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இயக்குநர் நிதீஷ் திவாரி, இந்த கேரக்டரில், உண்மையான தடகள வீராங்கனையே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததன் அடிப்படையில், ஆடிசன் நடைபெற்றது. டாப்ஸி, டிவி நடிகை கிரித்திகா காம்ரா உள்ளிட்ட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டஇந்த ஆடிசனில் இருந்து, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனையை, டங்கால் படக்குழு தேர்ந்தெடுத்துள்ளனர்.