இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் சில நேரங்களில் இதர கலைஞர்கள் நடிகர்கள் ஆவதுண்டு. அதாவது இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என இதர கலைஞர்களும் அரிதாரம் பூச தயாராகி விடுவர். தற்போது டோலிவுட்டில் பிரபல பின்னணி பாடகியான சுனிதா திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் தனது வசீகர குரலாலும், அழகிய தோற்றத்தாலும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோத்சவம் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தரப்பினர் சுனிதாவை தொடர்பு கொண்டு நடிக்கும் படி கேட்டதாகவும், அவர் ஓகே கூறி விட்டதாகவும் கூறப்படுகின்றது. விரைவில் இது சம்பந்தமாக அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. இவர் சேகர் கம்முலாவின் அனாமிகா படத்தின் பிரோமோஷன் சாங்கில் நடித்து இருக்கிறார். இதைத்தவிர அவர் திரையில் தலை காட்டியது கிடையாது. இந்நிலையில் அவர் இந்த வாய்ப்பை நன்றாக பயன் படுத்தி கொள்வர் என்று கூறப்படுகின்றது. ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இந்த படத்தில் பிரின்சுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.