ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஏதோ ஒன்றிரண்டு படங்களில் மட்டும் சின்னதாக நெகடிவ் கேரக்டரில் நடித்திருக்கிறாரே தவிர, முழுப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு 'சிறகொடிஞ்ச கினவுகள்' படம் மூலமாக கிடைத்துள்ளது. இதில் பியூட்டி என்னவென்றால் படத்தில் அஜித், விஜய் பாணியில் வாலி, அழகிய தமிழ் மகன் படம்போல டபுள் ஆக்ஷன் பண்ணுகிறார் குஞ்சாக்கோ. ஆம் படத்தில் ஹீரோவும் அவரே. வில்லனும் அவரே..!.
இருபது வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பானுப்ரியா நடித்து ஹிட்டான 'அழகிய ராவணன்' படத்தின் கதையை தழுவித்தான் இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறதாம்.. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கிராமத்து டெய்லராகவும், கல்ப் ரிட்டர்ன் மலையாளியாகவும் நடிக்கிறார். லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்கிறார்.
சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் குணச்சித்திர நடிகர் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் இன்னொரு அதிசயம் என்னவென்றால், சீனிவாசன் மற்றும் ரீமா கல்லிங்கல் இருவரின் கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் பெயர்கள் இருக்குமாம். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரவர் தொழில் சார்ந்தே அழைக்கப்படுவார்களாம்.