தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குடும்பமா , நடிப்புத்தொழிலா என்று இரு வாய்ப்புகள் என்முன் வைக்கப்பட்டால், எனது தேர்வு குடும்பமாகவே இருக்கும் என்று பாலிவுட் நடிகை கரிஸ்மா கபூர் கூறியுள்ளார். 2012ம் ஆண்டில் வெளியான டேஞ்சரஸ் இஸ்க் படத்தில், கடைசியாக கரிஸ்மா கபூர் நடித்திருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கரிஸ்மா கபூர் கூறியதாவது, படமா, குடும்பமா என்று கேட்டால், எனது தேர்வு குடும்பம் ஆகத்தான் இருக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பதிலேயே எனக்கு மிகுந்த விருப்பம். படத்தில் நடிக்க வேண்டுமென்றால், பல நாட்கள், பல மாதங்கள், குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரிடும். அதனால், தற்போதைக்கு படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கரிஸ்மா கபூர் கூறினார்.