தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகி உள்ள ஆல் இஸ் வெல் படம், ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன், ரிஷி கபூர், அசின், சுப்ரியா பதக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் நடிப்பதாக இருந்தது. இதன்காரணமாக, படப்பிடிப்பும் தாமதமாகிக்கொண்டே இருந்தது. இந்நிலையில், ஸ்மிருதி இரானி, நடிக்கும் திட்டத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, மும்பை மற்றும் நாசிக் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூரின் முந்தைய ஹிட் படங்களை கவுரவிக்கும் வகையில், அபிஷேக் பச்சனும், ரிஷி கபூரும், இப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.