Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதைக்கே முதலிடம் கொடுக்கும் கங்காரு பிரியங்கா!

19 ஏப், 2015 - 09:58 IST
எழுத்தின் அளவு:
Priyanka-gave-importance-to-stories

உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற படங்களை இயக்கியவர் சாமி. இதில் மிருகம் படத்தை இயக்கியபோது அப்படநாயகி பத்மப்பிரியாவை படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் ஓங்கி அடித்தார். அதன்காரணமாக ஓராண்டு அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. அதையடுத்து, சிந்துசமவெளியை இயக்கினார். அப்படத்தில் மாமனாருடன் கள்ள உறவு வைத்திருக்கும் மருமகளாக நடித்த அமலாபால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில், அதே சாமி தற்போது இயக்கியுள்ள கங்காரு படத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். ஆனால் அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் படம் என்பதால் பாசக்கார தங்கச்சியாக நடித்துள்ளார்.


இதுபற்றி பிரியங்கா கூறும்போது, டைரக்டர் சாமி படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் முதலில் எனக்கு பயமாக இருந்தது. அதனால் தயங்கினேன். ஆனால் அந்த படத்தின் கதையை அவர் சொன்னபோது கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த காலத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை சொல்லும் கதைகள் கிடைப்பதே அரிது என்பதால், உடனே நடிக்க சம்மதித்தேன். அதோடு, அவர் ஸ்பாட்டில் கோப்பப்படுவார் என்று கேள்விப்பட்டு பயத்துடனேயே நடித்தேன். ஆனால் அவர் என்னிடம் கடிந்து கொள்ளவே இல்லை. ரொம்ப பாசத்தோடு நடந்து கொண்டார். அதனால் கங்காரு படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறேன். மேலும், இந்த படத்திற்கு பிறகு சாரல் உள்பட இரண்டு படங்களில் நடிக்கிறேன். ஆனால் நடிக்கும் இரண்டு படங்களிலுமே வளர்ந்து வரும் ஹீரோக்களுடன்தான் நடிக்கிறேன். காரணம், இந்த படங்களில் ஹீரோயினிக்கு கதையில் முக்கியத்துவம் உள்ளது. அதோடு, முன்னணி ஹீரோக்களுடனும் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நல்ல கதைகள், நல்ல கதாபாத்திரங்களுக்கு மட்டுமே நான் முதலிடம் கொடுப்பேன் என்கிறார் பிரியங்கா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in