'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோரது நடிப்பில் பல கோடி செலவில் உத்தமவில்லன் படத்தைத் தயாரித்திருக்கிறார் லிங்குசாமி.
திருப்பதி பிரதர்ஸ் பேனரில் உருவாகி உள்ள உத்தமவில்லன் படத்தின் வெளியீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தநிலையில், ஒருவழியாக மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. உத்தமவில்லன் படம் தவிர இடம் பொருள் ஏவல், ரா..ரா... உட்பட அரைடஜன் படங்களையும் சத்தமில்லாமல் தயாரித்து வருகிறார் லிங்குசாமி.
இவற்றில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, விஷ்ணு நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படம் முடிவடைந்து மாதக்கணக்காகிறது. உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்த பிறகே மற்ற படங்களை வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தார் லிங்குசாமி. தற்போது உத்தமவில்லன் படத்தின் வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்டநிலையில் இடம் பொருள் ஏவல் படத்தையும் மே மாதமே வெளியிட முடிவு செய்துள்ளார்.
அனேகமாக மே 22 அன்று இடம்பொருள் ஏவல் படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.