மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினிகளில் ஒருவர் ரம்யா, சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒண், நட்சத்திர பேட்டி இப்படி ரம்யா தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே கிடையாது. அதுபோல நட்சத்திர கலை இரவுகள், சினிமா நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேடையிலும் தொகுத்து வழங்குவார். சினிமாவில் உள்ள அத்தனை நட்சத்திரங்களும் ரம்யாக்கு நல்ல நண்பர்கள். பல முக்கியமான இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் படத்தில் நடிக்க கேட்டபோது மறுத்து வந்த ரம்யா, இப்போது மணிரத்னம் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்து விட்டார்.
படத்தில் துல்கர் சல்மானின் தோழியாக படம் முழுக்க வருகிறார் ரம்யா. "எனக்கு நடிக்கத் தெரியாது. நடிப்பின் மீது பெரிய ஆர்வமும் இல்லை. ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை மீடியாக்கு அனுப்பும்போதே நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடுதான் அனுப்பினார்கள்.
அதனால்தான் பல வாய்ப்புகளை தவிர்த்தேன். ஆனால் திடீரென்னு மணி சார் என் படத்தில் நீ நடிக்கணும்னு சொன்னப்போ எனக்கு மறுத்து பேச முடியல. வீட்டில் டிஷ்கசன் பண்ணினேன் உடனே கிரீன் சிக்னல் கொடுத்தாங்க நடிச்சிட்டேன். தொடர்ந்து நடிக்கிறதுல பிரச்னை இல்லை. ஆனால் முக்கியமான கேரக்டராக இருக்கணும், அது எனக்கு பிடிக்கணும், என்னால் நடிக்க முடிகிற கேரக்டரா இருக்கணும் இத்தனையும் தாண்டி வந்தால் நடிக்கலாம். ஹீரோயின் பிரண்டு, அக்கா, தங்கை கேரக்டர்கள்ல சும்மா நடிக்க முடியாது" என்கிறார் ரம்யா.