Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : ஜெய் பானுஷாலி

05 ஏப், 2015 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Jay-Bhanushali-about-Ek-Baheli-Leela

ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த ஜெய் பானுஷாலி, ஏக் பஹேலி லீலா படத்தில் தனது கேரக்டர் மற்றும் சல்மான் கான், சன்னி லியோன் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.




படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...


படத்தில் எனது கேரக்டர் பெயர் கரண். ஏக் பஹேலி லீலா படத்தில், ஏக் பஹேலியாக நானும், லீலாவாக சன்னி லியோனும் நடித்துள்ளோம். படம், மும்பை மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடந்துள்ளது. மும்பையில் நடைபெறும் கதை என்னை சுற்றியும், லண்டனில் நடைபெறும் கதை, சன்னி லியோனை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.நாங்கள் இருவரும் ராஜஸ்தானில் சந்திப்பதே, படத்தின் முடிவாக உள்ளது. இப்படத்தில், நான் பாடகர் கேரக்டரில் நடித்துள்ளேன். நான் நடிக்கும் ஹேட் ஸ்டோரி 2 படத்தை விட சிறந்தது ஏக் பஹேலி லீலா.


பெண்களை மையப்படுத்திய கதையிலேயே தொடர்ந்து நடிப்பது ஏன்?


படம் பார்ப்பவர்களின் ரசனைகளை கருத்தில்கொண்டே தயாரிப்பாளர் யார் இதில் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார். சன்னி லியோனிற்கு ரசிகர்கள் அதிகளவில் இருப்பதாலும், அவருக்கென தனி பாப்புலாரிட்டி இருப்பதாலும், ஏக் பஹேலி லீலா படத்தில் அவர் முதன்மை கேரக்டரில் நடிக்கிறார். இதனை நாம் தவறு என்று கூற முடியாது. இப்படம், எனது கேரக்டரில் துவங்கி, எனது கேரக்டரிலேயே முடிகிறது. இப்படத்தில், எனக்கு வித்தியாசமான கேரக்டர்.


எந்த நடிகருடன் இணைந்து நடிக்க விருப்பம்?


நீங்கள் பலரது பேரை சொன்னாலும், எனது ஒரே தேர்வு சல்மான் கான் தானாகத்தான் இருக்கும். நான் சல்மான் கானின் தீவிர ரசிகன். சல்மான் கான் உடன் இணைந்து நடித்து, படத்தில் அடி வாங்க கூட நான் ரெடியாக உள்ளேன்.


உங்கள் மனைவி இப்படத்தில் நடித்துள்ளாராமே?


இல்லை. என் படத்தில் என் மனைவி மஹி நடிக்கவில்லை. படத்தை என் மனைவி ரசித்து பார்த்ததோடு மட்டுமல்லாது பாராட்டவும் செய்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.


சின்னத்திரையில் உங்களது பங்களிப்பு தொடருமா?


நிச்சயமாக, சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. படங்களில் நடிக்க துவங்கியபோதும், ஆண்டிற்கு ஒரு டி.வி.ஷோக்களாவது பண்ண வேண்டும் என நினைக்கிறேன். ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளுக்காக பல நகரங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால், இந்தாண்டு அது முடியாது என்று நினைக்கிறேன்.


ஆக்ஷன் கேரக்டரில் மீண்டும் நடிப்பீர்களா?


எனக்கு ஆக்ஷன் ரோல்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அதேநேரம், காமெடி கேரக்டர்களிலும் மிகுந்த விருப்பம் உண்டு. எந்த கேரக்டர் என்றாலும், விரும்பி செய்ய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.


சன்னி லியோன் பற்றி...


சன்னி லியோன் சிறந்த நடிகை. ஒவ்வொரு ஷாட்டிலும் 100 சதவீத பெர்பெக்சனை காட்ட வேண்டும் என்று நினைப்பவர். எல்லோரிடமும் நட்பாக பழகக்கூடியவர். பழகுவதற்கு இனிமையானவர் என்று ஜெய் பானுஷாலி கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in