ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக சினிமாவில் அந்தந்த மொழியில் பிரபலங்களாக இருக்கும் நடிகர், நடிகையர் உடன் தான் நடிக்க ஆசைப்படுவார்கள். தமிழ் என்றால் ரஜினி, கமல், இந்தி என்றால் அமிதாப்பச்சன் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பிரபலங்களை சொல்லலாம். ஆனால் இந்தியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சனுக்கோ நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. பட்லாப்பூர் படத்தில் நவாசுதீனின் நடிப்பை பார்த்து வியந்து போய்விட்டாராம். அதனால் உடனடியாக இயக்குநர் சுஜாய் கோஸை அழைத்து தனக்கும், நவாசுதீனுக்கு முக்கியத்ததுவம் இருக்கும் படி ஒரு கதை ரெடி பண்ண சொல்லியிருக்கிறார் அமிதாப். அவரும் அதற்கான வேலையில் இறங்கிவிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல்கள் வௌிவரலாம் என தெரிகிறது.