Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நடிப்பை விட படிப்பை தொடரவே விரும்புகிறேன் - லட்சுமி மேனன் பேட்டி!

02 ஏப், 2015 - 10:36 IST
எழுத்தின் அளவு:
I-likes-to-continue-my-study-says-Lakshmi-menon

கும்கி படத்தில் தொடங்கி ஜிகர்தண்டா படம் வரை தான் நடித்த படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை பக்காவாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பச்சக்கென ஒட்டிக்கொண்டவர் நடிகை லட்சுமி மேனன். பார்க்கத்தான் இவர் குட்டிப்பெண் போன்று இருப்பார், ஆனால் குட்டியாக இருந்தாலும், பட்டி தொட்டியெல்லாம் பெயர் எடுத்தவர் லட்சுமி மேனன். கொம்பன் படத்தில் லட்சுமி மேனன் நடிப்பை பார்த்தவர்கள், இப்படி ஒரு மகள் நமக்கு கிடைக்கமாட்டாரா.? இப்படியொரு மனைவி நமக்கு அமையமாட்டாரா.? என்று ஏங்க வைத்துள்ளார்.


கொம்பன் படத்தில், அம்மி அரைப்பதில் தொடங்கி அப்பாவுக்கு நல்ல மகளாக, கணவருக்கு நல்ல மனைவியாக, எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக பள்ளிக்கு போய் வருகிற கேரக்டரில் லட்சுமி மேனனை பார்க்கும் போது, ஏதோ பக்கத்து வீட்டு பெண் போன்று தோன்றி அசால்ட்டாக நடித்து அசத்தியுள்ளார் லட்சுமி மேனன். கொம்பன் படம் ரிலீஸாகியுள்ள நிலையில், படம் ரிலீஸானது கூட தெரியாமல் ப்ளஸ்-2 தேர்வில் பிஸியாக, சினிமா எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்த லட்சுமி மேனனை தொடர்பு கொண்டு, கொம்பன் படம் அனுபவம் குறித்து கேட்டோம். அவர் அளித்த மினி பேட்டி இதோ...


* படிப்பெல்லாம் எப்படி போகிறது...?


ப்ளஸ் -2 தேர்வு எழுதி வருகிறேன். இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ளது. தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. கடைசி நேரத்தில் படித்து ஏதோ கொஞ்சம் எழுதியுள்ளேன். மார்க் வந்த பின்னர் தான் தெரியும், தொடர்ந்து படிப்பை தொடர ஆசைப்படுகிறேன்.


* கொம்பன் படம் பற்றி...?


குட்டி புலி படத்தின் போதே முத்தையாவுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. திரும்பவும் என்னை கிராமத்து பக்கம் கொண்டு போய் உள்ளார். கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஏனென்றால், அங்கு பெரிய வசதிகள் எதுவும் இருக்காது. இருந்தாலும் அதையும் தாண்டி கஷ்டப்பட்டு நடித்தேன். நான் கேரளத்து நடிகை என்றாலும் தமிழ்நாட்டு நடிகையாகத்தான் என்னை பார்க்கிறார்கள். அதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.


கொம்பன் படம் பல தடைகளை கடந்து ரிலீஸாகியுள்ளது. படம் நன்றாக வந்திருப்பதாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இதை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது. கொம்பன் படத்தில் அப்பா-மகள் பாசம், மாமனார்-மருமகன் பாசத்தை அருமையாகவும், அழகாகவும் படமாக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா.


* கார்த்தியுடன் நடித்த அனுபவம் பற்றி...?


கொம்பன் படத்தில் கார்த்திக்கு எனக்கு நிறைய உதவினார். டயலாக் எப்படி உச்சரிக்கணும் உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை சொல்லி கொடுப்பார். அதேசமயம் நடிப்பில் தலையிடமாட்டார்.


அப்பாவாக நடித்த ராஜ்கிரண், கணவராக நடித்த கார்த்தி, இந்த இரண்டு கேரக்டர்களையும், உணர்வுகளையும் நிஜவாழ்க்கையில் நான் உணர்ந்ததில்லை. எந்தப்படத்தில் நடித்தாலும் அந்தப்படம் நன்றாக வருமா.? வெற்றி பெறுமா.? என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன், யோசிக்க மாட்டேன். அந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு நான் சென்று விடுவேன். கொம்பன் படத்திலும் அப்படி தான் பழனி என்ற கேரக்டரில் நடித்தேன். ரசிகர்கள் என் நடிப்பை அங்கீகரித்தார்கள் என்றால் அந்த பெருமை எல்லாம் இயக்குநர் முத்தையாவைத்தான் சேரும்.


* அடுத்த படங்கள் குறித்து...?


கொம்பன் படத்திற்கு பிறகு எனது நடிப்பில் சிப்பாய் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்டது. இந்தப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நான் கமிட்டாகவில்லை. படிப்பை தொடரவே விரும்புகிறேன்.


இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in