ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். இளையராஜாவின் வாரிசான இவர் தந்தையை போலவே இசையில் அசத்தினார். இடையில் தாயின் மரணம், திருமண பிரச்னை, மதமாற்றம், மூன்றாவது திருமணம் என்று... சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் இப்போது மீண்டும் முழு மூச்சாக சினிமாவில் பணியாற்ற தொடங்கியுள்ளார். சூர்யாவின் மாஸ் உள்ளிட்ட சில படங்களில் இசையைமத்து வருகிறார். இதுதவிர நெல்லையில் விரைவில் இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல்., போன்று பாட்மிட்டன் ப்ரீமியர் லீக்கான பிபிஎல்., போட்டிக்கு விரைவில் தீம் சாங் அமைக்க இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.