'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் “மாங்கா“. இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா கூறுகையில், இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி, தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்து கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான். இவனுடைய முட்டாள் தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி) யை சந்திக்கிறான். இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது. இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை என்றார் இயக்குனர்.