தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண்கள் உரிமை மற்றும் மேம்பாடு குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள மை சாய்ஸ் வீடியோ தனக்கு பிடிக்கவில்லை என்று சக நடிகையான சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார். தீபிகா படுகோனின் மை சாய்ஸ் வீடியோ, சமூக வலைதளங்களில், வெகுவேகமாக பரவிவரும் நிலையில், அந்த வீடியோ குறித்து, திரை நட்சத்திரங்கள் உள்ளி்ட்ட பல்வேறு தரப்பினர், தீபிகாவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள சக நடிகையான சோனாக்ஷி சின்காவோ, இந்த ஒரு வீடியோவால் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களையோ, பெண்களை மேம்படுத்திவிடவோ முடியாது என்று கூறியுள்ளார். தீபிகாவின் வீடியோ குறித்த சோனாக்ஷியின் கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.