Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உத்தம வில்லன் ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளிபோனது

31 மார், 2015 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Uthama-villain-release-postponed-again

கமலின் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ், தேதி குறிப்பிடப்படாமல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வௌியாக இருக்கும் படம் உத்தம வில்லன். கமலின் நண்பரும், நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராம், இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், நாசர், எம்.எஸ்.பாஸ்கர்... என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கமல், 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் மற்றும் 21ம் நூற்றாண்டின் சினிமா நடிகராக நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து தயாரித்துள்ளனர்.


இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வௌியிடப்பட்ட உத்தம வில்லன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.


இந்நிலையில் ஏற்கனவே ஏப்ரல் 2ம் தேதி உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அது ஏப்ரல் 10ம் தேதி மாற்றப்பட்ட நிலையில் இப்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளது.


இதுப்பற்றி பிரைம் மீடியா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, உத்தமவில்லன் படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகவில்லை. சென்சார் பணிகள் எல்லாம் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.


பிரைம் மீடியா நிறுவனம் தான் உத்தம வில்லன் படத்தை அமெரிக்காவில் வௌியிட இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in