இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
விஜய்யின் தம்பி என்ற விசிட்டிங் கார்ட் இருந்தும் விக்ராந்துக்கு நோ யூஸ். பல படங்கள் நடித்தும் அவரால் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தன் அண்ணன் சஞ்சீவ் தயாரித்து இயக்கும் பிறவி என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ராந்த். பிறவி படத்தில் விக்ராந்துடன், அரவிந்த் சிங், ராகுல் வெங்கட், லீமா, அபிநயா, பார்வதி நிர்பன், அருள்தாஸ், சரித்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் பிறவி படத்தை புரமோட் செய்ய தன் நட்சத்திர நண்பர்களான விஷால், ஆர்யா, விஷ்ணுவின் உதவியை நாடினார் விக்ராந்த். அவர் கேட்டுக் கொண்டதற்காக, விக்ராந்த் நடித்துவரும் 'பிறவி' படத்திற்காக விஷால்-ஆர்யா-விஷ்ணு -விக்ராந்த் நான்கு பேரும் இணைந்து 'தாக்க தாக்க' என்ற அறிமுக பாடலுக்காக நடனமாடியிருக்கிறார்கள்.