மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
டோலிவுட் வட்டாரத்தில் ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகி வரும் S/O சத்தியமூர்த்தி படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை சமந்தா, நடிகை நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் திரைக்கு வந்த இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் இப்படம் அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.