வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இயக்குனர் எழிலின் உதவியாளர் ராஜசேகர் இயக்கி வரும் படம் மாப்ள சிங்கம், இதில் விமல் - அஞ்சலி ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல்காட்சி மட்டும் எடுக்காமல் இருந்தது. இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டுயிருந்தனர் ஆனால் முடியவில்லை. காரணம் ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விட செலவு அதிகமாகி விட்டது என்று தயாரிப்பாளார் மறுத்து விட்டாராம். இதனால் அந்த பாடல் காட்சியை சென்னையில் எடுக்க ஆலோசித்து அதற்கான லொக்கேஷன் பார்த்து வருகிறார்கள். இதற்கிடையில் பணம் ஒரு பிரச்னை என்பதை தாண்டி நாயகி அஞ்சலி, சென்னைக்கு வந்தால் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று பயந்து வரமறுத்து அடம் பிடித்திருக்கிறார். இதையெல்லாம் சரிசெய்து அஞ்சலியை ஆட்டம் போட சம்மதிக்க வைத்து விட்டனர் இன்னும் சில தினங்களில் படல் காட்சி தொடங்க உள்ளது.