'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கும் 'உத்தம வில்லன்' படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் ஆடியோ வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, போஸ், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட 'உத்தம வில்லன்' படக் குழுவினர் ஹைதராபத் புறப்பட்டு சென்றனர்.
'உத்தம வில்லன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் நடந்து போது, மும்பையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் முன்னோட்டத்தை வெளியிட்டார் ஸ்ருதிஹாசன்.