'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
அமரகாவியம் மியா ஜார்ஜ், மலையாளத்தில் முன்னணி நடிகை. இவர் நடித்த ஐந்து படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துள்ளன. அப்படி அவர் நடித்த படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்கள் இல்லை. ஆனால் அத்தனை படத்திலுமே மியாவை சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருந்ததாம்.
அதனால்தான் தமிழிலும் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கே முதலிடம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணுவுடன் நடித்தவர், இப்போது அட்டகத்தி தினேசுடன் ஒருநாள் கூத்து என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
அதேபோல் இவரைப்போலவே மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது இது என்ன மயக்கம், ரஜினி முருகன், பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் இவர்கள் இருவரும் மலையாளத்தில் நடித்து வந்தபோது திரைக்குப்பின்னால் தொழில்முறை போட்டி நடந்து வந்திருக்கிறது. முக்கியமாக, கீர்த்தி சுரேஷ் முயற்சி செய்யும் படங்களை எளிதாக தன்பக்கம் இழுத்திருக்கிறார் மியா. அப்படி தொடங்கிய இவர்களின் தொழில் போட்டி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.