ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீ தெலுங்கு சேனல் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து. பத்தாம் ஆண்டு விழாவை பிரமாண்ட நட்சத்திர இரவுகள், பிரமாண்ட நிகழ்ச்சிகள் மூலம் ஜீ தெலுங்கு டி.வி கொண்டாட இருக்கிறது. ஆண்டு முழுவதும் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிகளுக்கு நடிகை தமன்னாவை தூதுவராக அறிவித்திருக்கிறது ஜீ தெலுங்கு டி.வி.
ஆண்டு விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, நட்சத்திர கலை நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றுவது. பிரபலங்களை பேட்டி எடுப்பது என பல முக்கிய பணிகளை கவனிக்க இருக்கிறார் தமன்னா. ஐதராபத்தில் நேற்று (மார்ச் 29) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை ஜீ தெலுங்கு சேனல் அறிவித்தது. தூதுவராக இருக்க ஜீ தெலுங்கு சேனல் பெரும் தொகையை தமன்னாவுக்கு சன்மானமாக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜீ தமிழ் சேனலுக்கு 2018மாவது ஆண்டு பத்தாண்டு நிறைவு வருகிறது. அதற்கும் தமன்னாவே தூதுவர் என்றும் கூறப்படுகிறது.