'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேர்வுகளை காரணம் காட்டி நடிப்பை தள்ளிப்போட்டாகிவிட்டது. ஓகே., இன்னும் சில தினங்களில் தேர்வுகள் முடிந்ததும் நடிக்காமல் இருக்க என்ன காரணம் சொல்லப்போகிறாரோ என சிலர் கிண்டலும் கேலியுமாக கூட சொல்லி வருகிறார்கள். ஆனால் எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை என்கிறார் லட்சுமி மேனன். ஆனால் கிராமத்துப்பெண், பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி என்று சொல்லிக்கொண்டு என்னை தாவணி கட்ட மட்டும் சொல்லிவிடாதீர்கள்” என கதை சொல்ல தயாராகுபவர்களுக்கு அங்கிருந்தே ஒரு பெரிய கும்பிடு போடுகிறார் லட்சுமி மேனன்.
சரி தாவணி வேண்டாம் என்றால் கிளாமர் ஏரியாவில் கால் வைக்க முடிவுசெய்துவிட்டாரா என்றால் “கிளாமரா..? உவ்வே” என்கிறாராம். ஒருவேளை மலையாளத்தில் மட்டுமே நடிக்கப்போகிறாரா என்றால் அதுவும் இல்லையாம்.. “என்னை, எனக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடித்து எனக்கு அந்தஸ்தும் அங்கீகாரமும் தந்தது தமிழ்சினிமா தான். தமிழுக்குத்தான் முன்னுரிமை” என்கிற லட்சுமி மேனன் கிசுகிசுக்களை ரொம்பவே ரசிக்கிறாராம். கிசுகிசு என்றால் பத்திரிகையின் உள் பக்கத்தில் வருவதைவிட வெளியே கொட்டை எழுத்தில் இருக்கவேண்டும்.. அதுதான் கிசுகிசுவுக்கான கம்பீரம்” என்கிறார்.