இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு, நெல்லையில், யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சி, கிரீன் டிரீஸ் சொல்யூசன் அமைப்புடன் இணைந்து, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மே 9ம் தேதி, நெல்லை டெல்டின் மைதானத்தில், இந்த இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யுவன் சங்கர் ராஜா தலைமையில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா, பவதாரிணி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோலிவுட் மற்றும் பாலிவுட் இசை நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.