தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். யூடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எஸ்.பி.ஜனநாதன் தனது நிறுவனம் சார்பில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். முதலில் இந்தப் படத்தில் ஜீவாவும், ஜெயம்ரவியும் நடிப்பதாக இருந்தது. அவர்கள் கால்ஷீட் கிடைப்பதில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு பதிலாக ஆர்யாவும், விஜய்சேதுபதியும் நடித்தார்கள். முதலில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்த கேரக்டரில் கார்த்திகா நடித்தார். இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் குளுமணாலியில் நடந்தது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்புகள் பின்னி மில்லில் பிரமாண்ட ஜெயில் செட் போடப்பட்டு அங்கு நடைபெற்றது. சுமார் 4 கோடி செலவில் போடப்பட்ட ஜெயில் செட்டில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. படத்திற்கு வர்ஷன் பின்னணி இசை கோர்த்து வருகிறார். கலர் கரெக்ஷன், டப்பிங், டி.ஐ பணிகள் வெவ்வேறு இடங்களில் வேகமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள். ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் படம் வெளிவருகிறது.