ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அனுஷ்கா சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான என்.ஹெச். 10 படம், பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்படக்குழுவினர் மீண்டும் இணைந்து, என்.ஹெச்.12 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளராக அறிமுகமான படம் என்.ஹெச்.10. இப்படம், அனுஷ்காவிற்கு நல்ல பெயர் மட்டுமல்லாது வசூரல்ரீதியாகவும், சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது, அனுஷ்கா சர்மா, பான்டோம் பிலிம்ஸ் உடன் இணைந்து என்.ஹெச்.10 படத்தை தயாரித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பான்டோம் பிலிம்ஸ் நிறுவனம், என்.ஹெச்.12 என்ற படத்தை தயாரிக்கிறது. என்.ஹெச்.10ல் பணிபுரிந்த அனைவரும் இதிலும் தொடர்வார்கள் என்று பான்டோம் பிலிம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவி்ல இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.