'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. கொல்கத்தா நடிகையான இவர் தமிழில் முன்னணி நடிகையாகியே தீருவது என்ற வைராக்கியத்துடன் கோடம்பாக்கத்தில் குடியேறி விட்டார். அந்த படத்தை அடுத்து விஷாலின் பாயும் புலி படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், புதிய படங்களை கைப்பற்றும் தீவிரமான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அதனால் தனது மேனேஜர் ஒருவருடன் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு புதிய பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் கம்பெனிகளுக்கு விசிட் அடித்து படவேட்டை நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.
மேலும், தனது முதல் படத்தில் ஹோம்லியாக நடித்திருந்தபோதும், நிஜத்தில் கவர்ச்சிகரமாகவே காட்சியளிக்கும் அவர், கம்பெனிகளுக்கு விசிட் அடிக்கும்போது அதிர வைக்கும் கவர்ச்சி உடைகளை அணிந்து சென்று காண்போருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். அதனால், ஐஸ்வர்யா தத்தா செல்லும் கம்பெனிகளில் அவருக்கு நல்ல வரவேறபு கிடைத்து வருகிறதாம். மேலும், கதை விவாத்தில் டென்சனாக காணப்படும் டைரக்டர்கள்கூட அவரை எதிரே உட்கார வைத்து பேசி ரிலாக்ஸ் ஆகிறார்களாம்.