Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவுக்காக வேகத்தை குறைத்த விஜய்!

29 மார், 2015 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Vijay-reduces-his-speed-for-Hansika

முன்பெல்லாம் ரஜினியுடன் இணைந்து நடனமாடுவதற்குத்தான் நடிகைகளெல்லாம் பயப்படுவார்கள். காரணம், இவர்கள் ஒரு இரண்டு ஸ்டெப் வைப்பதற்குள் அவர் நான்கைந்து ஸ்டெப் வைத்து விடுவார். அந்த அளவுக்கு அவர் இயற்கையிலேயே ஸ்பீடானவர்.


அவரைத் தொடர்ந்து இப்போது விஜய்யுடன் நடனமாடவும் சில நடிகைகள் பயப்படுகிறார்கள். குறிப்பாக, விஜய்யைப் பொறுத்தவரை ஓடியாடி நடனமாடுவதை விட ஒரே இடத்தில் நின்று பல ஸ்டெப்புகளை வைத்து கலக்கலாக நடனமாடக்கூடியவர். இது ரொம்ப கடினமான விசயமும்கூட. அதனால்தான் விஜய்க்கு சரியான தீனி போட வேண்டுமே என்று அவர் படங்களில் நடனமாஸ்டர்கள் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முன்பே எந்த மாதிரியான நடன அசைவுகளை கொடுக்கலாம் என்று நிறைய பயிற்சி எடுத்து விட்டுத்தான் களத்தில் இறங்குவார்கள்.


அந்த வகையில, தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு விஜய்க்கு மிக வித்தியாசமான நடன அசைவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாம். அவரும் வழக்கம்போல் ஆடி அசத்திக்கொண்டிருக்கிறாராம். ஆனால் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடிய ஹன்சிகா அவருக்கு இணையாக ஆட முடியாமல் திரும்பத்திரும்ப சொதப்பிக்கொண்டேயிருந்தாராம்.


அதனால் அந்த காட்சி பல ரீடேக் எடுத்ததாம். அதனால் ஹன்சிகாவுக்காக தனது வேகத்தை குறைத்து நடனமாடி அந்த காட்சியை ஓகே செய்திருக்கிறார் விஜய். ஆக ஒருவழியாக விஜய்யுடன் ஆடி முடித்த ஹன்சிகா, இதுவரை நானும் எத்தனையோ ஹீரோக்களுடன் நடனமாடி விட்டேன். ஆனால் இப்படியொரு ஸ்பீடான ஹீரோவைப் பார்த்ததில்லை என்று தனது வியப்பை சொல்லிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in