'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பேரரசு இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். அதற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும் திருப்பாச்சி படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் நடித்ததால் அடுத்து இவர் பெரிய காமெடியனாகும் நிலை இருந்தது.
ஆனால், பின்னர் அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. அதனால் சில சின்ன படங்களில் நடித்த பெஞ்சமின் மார்க்கெட்டில் இருந்தே காணாமல் போய் விட்டார். அதையடுத்து, விஜய்யை சந்தித்தும் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டாராம். ஆனால், அவரோ, நான் நடிக்கும் படங்களில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே டைரக்டர்கள்தான். நான் அதில் தலையிடுவதே இல்லை. அதனால் என்னை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களை சந்தித்து நீங்களே கேளுங்கள். கதைக்கு ஓகே என்றால் அவர்கள் சான்ஸ் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டாராம்.