பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வடிவேலு நடித்து வரும் ''எலி'' படம், கோடை விருந்தாக வௌிவர இருக்கிறது. தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலு, சில பிரச்னைகளால், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். கடந்தாண்டு வௌிவந்த தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தெனாலிராமன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், இப்போது மீண்டும் ஹீரோவாக எலி என்ற படத்தில் நடித்து வருகிறார். தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளானே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் வடிவேலு ஜோடியாக 'அந்நியன்' புகழ் சதா நடிக்கிறார், வித்யாசாகர் இசையமைக்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் போன்று உளவாளியான வடிவேலு செய்யும் காமெடி அட்டகாசம் தான் எலி. முழுக்க முழுக்க சரிப்புக்கு உத்திரவாதம் தரும்படி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வடிவேலு உடன் முந்தைய படங்களில் நடித்த லெட்சுமணன், வெங்கல் ராவ் ஆகியோரும் இப்படத்தில் இணைந்து காமெடியில் அசத்தி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளை கவரும் படியான காமெடி காட்சிகள் படத்தில் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்புகாக நடந்து வருகிறது. தற்போது சென்னையில் பின்னி மில்லில் பிரமாண்டமான செட்டு போட்டு பாடல் சதா-வடிவேலு உடனான பாடல்காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார்கள்.
மே மாதம் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும், அந்த சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்தால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என கருதுகின்றனர். அதனால் ஏப்ரல் மாதத்திற்குள் படத்தை முடித்துவிட்டு, பாடல்களையும் வௌியிட திட்டமிட்டுள்ளனர். அதோடு படத்தையும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.