பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. உத்தம வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் நடந்தது. இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பானது! தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள உத்தமவில்லன் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகவிருக்கிறது. எனவே உத்தமவில்லன் படத்தின் தெலுங்குப்பதிப்புக்கான புரமோஷனை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதல் கட்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை ஹைதராபாத்திலுள்ள ஷில்பகலா வேதிகா இன்டோர் ஆடிட்டோரியத்தில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமான முறையில் செய்துள்ளார்கள். இந்த இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன், இயக்குனர் ரமேஷ் அரவிந்த், திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ், இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட உத்தம வில்லன் படக் குழுவினர் ஹைதராபத் புறப்பட்டு சென்றுள்ளனர். ஹைதராபாத் விழாவை முடித்துவிட்டு வந்த பிறகு இன்னும் சில நாட்களில் கேரளாவுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.