ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷமிதாப் படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் இருந்தபோதிலும், அது தோல்விபடம் என்று யாரும் கூறாதநிலையில், அப்படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்த அமிதாப் பச்சனே, ஷமிதாப் படம், வசூல்ரீதியாக தோல்விப்படம் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து, அமிதாப் பச்சன் கூறியதாவது, ஷமிதாப் படம், வசூல்ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது என்பது உண்மைதான். மக்களின் எதிர்பார்ப்பை, அப்படம் பூர்த்தி செய்யவில்லை. இருந்தபோதிலும், ஷமிதாப் படத்தில் நடித்தது தனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. ஷமிதாப் படம் வசூல்ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தாலும், என்வாழ்வில், மிக முக்கியமான படம் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.